2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சீன ட்ரோன்களுக்கு நிரந்தர தடை : அமெரிக்கா உத்தரவு

உலகம்December 24, 2025 · 8 months முன்2
சீன ட்ரோன்களுக்கு நிரந்தர தடை : அமெரிக்கா உத்தரவு

அமெரிக்காவில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கண்காணிப்பு மற்றும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

சீனாவில் இருந்து இறக்குமதியாகும் ட்ரோன்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும் எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும் என புகார் எழுந்தது.

இதனை தொடர்ந்து நாட்டின் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் சீன ட்ரோன்களுக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், தரவு பாதுகாப்பு கட்டமைப்பை சிரமைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.