2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சிவனொளிபாதமலையில் பொலித்தீன் பாவனை கட்டுப்பாடு

உள்ளூர்December 23, 2025 · 8 months முன்0
சிவனொளிபாதமலையில் பொலித்தீன் பாவனை கட்டுப்பாடு

சிவனொளிபாதமலை அதிகூருணர்வு வலயத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து இன்று (23) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை ஊடக பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதத்தில் ஆரம்பமாகும் சிவனொளிபாதமலை யாத்திரை காலம் சுமார் ஆறு மாதங்கள் வரை நீடிப்பதுடன், அந்த காலப்பகுதியில் யாத்திரிகர்கள் மற்றும் வருகையாளர்களால் உற்பத்தியாகும் உக்கலடையும் மற்றும் உக்கலடையாத கழிவுப் பொருட்கள் அப்பிரதேசத்தில் அதிகளவில் தேக்கமடைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் சிவனொளிபாதமலை வனப்பகுதி, ஒரு அதிகூருணர்வு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு கழிவு முகாமைத்துவம் மேற்கொள்வது அத்தியாவசியமாகும்.

இதனை முன்னிட்டு, 2025 ஆம் ஆண்டு முதல் சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்கான கீழ் குறிப்பிட்ட நடைமுறைகள் சுற்றாடல் அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் அமைச்சரவைக்கு விளக்கியுள்ளார். அதற்கமைய, அந்த யோசனைக்கு அமைச்சரவை உடன்பாடு வழங்கியுள்ளது.