2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் ஷிரான் பாசிக்கிடம் விசாரணை!இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்அடுத்தடுத்து 3 அதிர்வுகள்!பல பகுதிகளில் இன்று மழை,வளிமண்டலவியல்திணைக்கம் அறிவிப்பு!இலங்கையின் பொருளாதார வளர்ச்சி சீராக இருக்கும் – மத்திய வங்கி கணிப்பு!22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில்!டெங்கு வேகமாக பரவுகிறதா? நோயாளர்கள் எண்ணிக்கை 91 ஆயிரத்தை தாண்டியது!அமெரிக்க போர்க்கப்பலில் உணவுப் பற்றாக்குறை – ஆயிரக்கணக்கான வீரர்கள் அவதி?

அம்பலாங்கொட நகரில் காலை துப்பாக்கிச் சூடு: முகாமையாளர் பலி

உள்ளூர்December 22, 2025 · 8 months முன்1

அம்பலாங்கொடை நகரில் அமைந்துள்ள ஒரு வர்த்தக நிலையத்தின் முகாமையாளரை இலக்காகக் கொண்டு, இன்று (22) காலை துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறித்த முகாமையாளர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள், இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய பின்னர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், இரண்டு குற்றக் கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர் குற்றக் கும்பல் உறுப்பினர்களுடன் தொடர்புகளை கொண்டிருந்தவர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பிலும், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையாகவும், அம்பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.