2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கர்ப்பிணிப் பெண்களுக்கான ஊட்டச்சத்து கொடுப்பனவு இன்று

உள்ளூர்December 16, 2025 · 8 months முன்0
கர்ப்பிணிப் பெண்களுக்கான ஊட்டச்சத்து கொடுப்பனவு இன்று

நிலவும் பேரிடர் சூழ்நிலை மற்றும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, கர்ப்பிணிப் பெண்களுக்கு இன்று (16) முதல் ரூ. 5,000 ஊட்டச்சத்து உதவித்தொகை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஊட்டச்சத்து உதவித்தொகையின் விநியோக நடவடிக்கை இன்று (16) காலை 9.30 மணிக்கு வெள்ளவத்தை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி பால்ராஜ் தலைமையில் நடைபெற உள்ளது.

நவம்பர் 30ஆம் திகதி வரை மகப்பேறு வைத்தியசாலைகளில் பதிவு செய்த கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இந்தக் கொடுப்பனவு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்.