2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!

ஓய்வூதியம் வழங்குவதற்கான மாதாந்த திகதிகள் அறிவிப்பு!

உள்ளூர்December 14, 2025 · 8 months முன்0
ஓய்வூதியம் வழங்குவதற்கான மாதாந்த திகதிகள் அறிவிப்பு!

ஓய்வூதியத் திணைக்களம் எதிர்வரும் ஆண்டு (2026) ஓய்வூதியம் வழங்குவதற்கான மாதாந்திர திகதிகளை அறிவித்துள்ளது.

ஓய்வூதிய திணைக்களத்தின் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் சமிந்த ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ஓய்வூதிய சுற்றறிக்கை எண் 03/2025 மற்றும் Pen/Pol06/25-2024 மூலம் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது கருவூலத்தின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, 2026ஆம் ஆண்டு ஜனவரி 09, பெப்ரவரி 10, மார்ச் 10, ஏப்ரல் 09, மே 08, ஜூன் 10, ஜூலை 10, ஆகஸ்ட் 10, செப்டம்பர் 10, அக்டோபர் 07, நவம்பர் 10 மற்றும் டிசம்பர் 10 ஆகிய திகதிகளில் ஓய்வூதியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.