2026 October 28, Wednesday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இலங்கைக்கு சீனா நன்கொடை!

உள்ளூர்December 1, 2025 · 11 months முன்1
இலங்கைக்கு சீனா நன்கொடை!

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதை அடுத்து, சீன அரசாங்கம் இலங்கைக்கு 100,000 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

சீன செஞ்சிலுவை சங்கம் இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு 100,000 அமெரிக்க டொலர்களை அவசர நிதி உதவியாக வழங்கியுள்ளதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.

மேலும், பேரிடர் நிவாரண முயற்சிகளை மேலும் வலுப்படுத்த, இலங்கையில் உள்ள சீன வர்த்தக சபை மற்றும் வெளிநாட்டு சீன சங்கம் ஆகியவை நன்கொடை திட்டங்களைத் தொடங்கி, பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆதரிப்பதற்காக கூட்டாக ரூ. 10 மில்லியன் திரட்டியுள்ளன.