2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!

டிட்வா புயல் எச்சரிக்கை – தமிழகத்தில் விமானங்கள் ரத்து

உள்ளூர்November 29, 2025 · 9 months முன்2
டிட்வா புயல் எச்சரிக்கை –  தமிழகத்தில் விமானங்கள் ரத்து

தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் எனக்கூறப்படும் ‘டிட்வா’ புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் இன்று (29) சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் 16 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

புயல் மழை எச்சரிக்கை காரணமாக சென்னை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, புதுச்சேரி ஆகிய நகரங்களில் இன்று மொத்தம் 54 விமானங்கள் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

விமானங்கள் ரத்து எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிகிறது. 

சென்னை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் இருந்து இயக்கப்படும் ஏ.டி.ஆர். எனப்படும் சிறிய ரக விமானங்கள் அனைத்தும் இன்று காலையில் இருந்து இரவு வரையில் இயக்கங்களை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

எனவே சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் பயணிகள் அனைவரும் தாங்கள் பயணிக்கும் விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தங்களுடைய விமானங்கள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல், தங்கள் பயணங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும்படி சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.