2026 October 26, Monday 🌧️ கொழும்பு 25° ⛈️ யாழ்ப்பாணம் 25° 🌧️ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளில் வெள்ளம்!

உள்ளூர்November 26, 2025 · 11 months முன்4
மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளில் வெள்ளம்!

மகாவலி கங்கை ஆற்றுப்படுக்கையைச் சுற்றியுள்ள சில பிரதேசங்களுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

மகாவலி ஆற்றின் சில நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று (25) இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக, மகாவலி ஆற்றுப்படுக்கையைச் சேர்ந்த கிண்ணியா, மூதூர், கந்தளாய், சேருவில, வெலிகந்த, மெதிரிகிரிய, லங்காபுர, தமன்கடுவ மற்றும் திம்புலாகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட மகாவலி கங்கை சார்ந்த தாழ்வான பகுதிகளுக்கு இவ்வாறு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதியின் கல்லெல்ல பகுதியும், சோமாவதி ரஜமஹா விகாரைக்கான நுழைவு வீதியும், சோமாவதி ரஜமஹா விகாரையைச் சுற்றியுள்ள பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதால், அடுத்த சில நாட்கள் வரை சோமாவதிய ரஜமஹா விகாரைக்குச் செல்லும் பக்தர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.