2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 28° ☀️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!

விசேட வைத்தியர்களுக்கான சட்ட வரைபு : குழு நியமனம்!

உள்ளூர்November 19, 2025 · 9 months முன்2
விசேட வைத்தியர்களுக்கான சட்ட வரைபு : குழு நியமனம்!

விசேட வைத்திய நிபுணர்களுக்கான சேவைச் சட்ட வரைபை தயாரிக்க சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு குழு ஒன்றை நியமித்துள்ளது.

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவின் ஆலோசனைக்கமைய இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

விசேட வைத்திய நிபுணர்கள் தொடர்பான விடயங்கள் குறித்து ஜனாதிபதியின் தலைமையில் நேற்று (18) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க இந்தக் குழுவை நியமித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் வீசேட வைத்திய நிபுணர்களுக்கான சேவைச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அவர்களும், ஏனைய உறுப்பினர்களாக, பணிப்பாளர் நாயகம் (வைத்திய சேவைகள்) வைத்தியர் அர்ஜூன திலகரத்ன, பிரதிப் பணிப்பாளர் நாயகம் (வைத்திய சேவைகள் II) வைத்தியர் சமித்தி சமரக்கோன் (பெண்), மற்றும் சட்ட அதிகாரி வைத்தியர் சாமிந்திகா ஹேரத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.