2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

அதிரும் பாண்டிய நாடு , அலை கடலாய் திரளும் தொண்டர்கள். தவெக மாநாடு 2.0

உலகம்August 21, 2025 · 12 months முன்0
அதிரும் பாண்டிய நாடு , அலை கடலாய் திரளும் தொண்டர்கள். தவெக மாநாடு 2.0

TVK maanadu | நடிகர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார். மதுரையில் 2-வது மாநில மாநாடு நடக்கிறது. விஜய்யின் உரைக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. தொண்டர்கள் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.

தளபதியாக மக்கள் மனதில் உலாவி வந்த நடிகர் விஜய் தற்போது அரசியலில் குதித்து 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனால், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து, தீவிர களப்பணி ஆற்றுகிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தல்தான் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் சந்திக்கும் முதல் தேர்தல் ஆகும். எனவே முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க அக்கட்சி தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. 2-வது மாநில மாநாடு இன்று (வியாழக்கிழமை) மதுரையில் பிரமாண்டமாக நடக்கிறது.