2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையம் மீது உக்ரைன் தாக்குதல்!

உலகம்November 16, 2025 · 9 months முன்1
ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையம் மீது உக்ரைன் தாக்குதல்!

உக்ரைன் நேட்டோ நாடுகளை இணைவதை எதிர்த்து கடந்த 2022 பெப்ரவரியில் ரஷ்யா தொடங்கிய போர் தீர்வு காணடபடாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில் இரவோடு இரவாக ரஷ்யாவின் துறைமுக நகரமான நோவோரோஸ்யிஸ்க் மீது உக்ரைன் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த துறைமுக நகரம் ரஷ்யாவின் முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி மையம் ஆகும்.

இந்த நிலையில் உக்ரைன் தாக்குதலில் நகரத்தின் மதிப்புமிக்க உள்கட்டமைப்பு சேதமடைந்ததாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதன் மூலம் ரஷ்யா உக்ரைன் போருக்கான அதிக நிதியை ஈட்டும் நிலையில் இந்த தாக்குதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் துறைமுகம், எண்ணெய் டெர்மினல் மற்றும் ரஷ்யாவின் S400 வான் பாதுகாப்பு அமைப்பு சேதமடைந்ததாக உக்ரைன் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இந்த தாக்குதலில் அப்பகுதியில் தீ கொழுந்து விட்டு எரிந்த காட்சிகள் வெளியாகி உள்ளன. முன்னதாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது நேற்று ரஷ்யா வான்வழித் தாக்குதல் நடத்தியத்தில் 7 பொதுமக்கள் உயிரிழந்த நிலையில் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.