2026 October 25, Sunday 🌧️ கொழும்பு 27° ⛈️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற வாகனம்!

உள்ளூர்November 14, 2025 · 11 months முன்2
விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற வாகனம்!

கொழும்பு – கண்டி பிரதான வீதியில், 36 ஆவது மலைக் கோவில் அருகில் இன்று (14) அதிகாலை மோட்டார் சைக்கிள் செலுத்துனர் ஒருவரை விபத்துக்குள்ளாக்கிவிட்டு வாகனம் ஒன்று தப்பிச் சென்றுள்ளது.

காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் வீதியில் விழுந்து கிடப்பதாக வரகாபொல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய செயற்பட்ட பொலிஸார், காயமடைந்தவரை வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த போதும் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் 31 வயதுடைய கணேமுல்லை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது வாகன விபத்து காரணமாக ஏற்பட்ட மரணம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன், விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளது.

சடலம் வரகாபொல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

வரகாபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.