2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 28° ☀️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!

இரட்டை உலக சாதனை படைத்த சாமுத்ரிகா!

உள்ளூர்November 13, 2025 · 9 months முன்1
இரட்டை உலக சாதனை படைத்த சாமுத்ரிகா!

சாமுத்ரிகா மேக்கப் அழகுக்கலை நிறுவனம் 315 பங்கேற்பாளர்களுடன் இரு பிரிவுகளில் ஒரே மேடையில் இரட்டை உலக சாதனையை கொழும்பில் படைத்துள்ளது.

இந்த சாதனையில் 315 பங்கேற்பாளர்கள் நேரடியாகவும், இணையம் வழியாகவும் கலந்து கொண்டனர்.

மணப்பெண் அலங்காரப் பிரிவில் 170 அழகுக்கலைஞர்களும், மணப்பெண் அலங்காரம் அல்லாத பிரிவில் 140 துறைசார் போட்டியாளர்களும் ஒரே நேரத்தில் பணியாற்றி இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

இந்தக் குறிப்பிடத்தக்க சாதனை, உலக சாதனைகள் சங்கத்தின் (World Record Union) நடுவர் திருமதி ஆலிஸ் ரெய்னாட் அவர்களால் நேரடியாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

மேலும், இந்த உலக சாதனையில் பங்குபற்றிய அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்தப் பெரும் வெற்றிக்காக பங்கேற்ற ஒவ்வொரு மேக்கப் கலைஞர், மாடல், ஏற்பாட்டாளர், ஆதரவாளர் மற்றும் குழு உறுப்பினருக்கும் நன்றி தெரிவித்த சாமுத்ரிகா அழகுக்கலை நிறுவனத்தின் தலைவர், திருமதி அனு குமரேசன், “நாங்கள் அழகை மட்டும் படைக்கவில்லை, வரலாற்றையே படைத்தோம்!” எனக் கூறினார்.

மேலும், அனு குமரேசனின் சாமுத்ரிகா நிறுவனம் இதற்கு முன்பும் ஆசிய உலக சாதனைப் புத்தகத்தில் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.