2026 October 25, Sunday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

காலி – கொழும்பு பிரதான வீதியில் விபத்து சிறுவன் மரணம்

உள்ளூர்November 8, 2025 · 12 months முன்5
காலி – கொழும்பு பிரதான வீதியில் விபத்து சிறுவன் மரணம்

காலி – கொழும்பு பிரதான வீதியில் வெட்டுமகடை சந்திக்கருகில், துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் ஒருவன் லொறி  ஒன்றில் மோதி உயிரிழந்துள்ளான்.

 காலிப் பகுதியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லொறி, நேற்று (07) இரவு வீதியை கடக்க முற்பட்ட துவிச்சக்கர வண்டியில் மோதியுள்ளது.

 விபத்தில் படுகாயமடைந்த அச்சிறுவன் களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளான்.

 இவ்வாறு உயிரிழந்த சிறுவன் 11 வயதுடையவன் எனவும், கட்டுக்குறுந்த பிரதேசத்தைச் சேர்ந்தவன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சடலம் களுத்துறை நாகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துக்கு காரணமான லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

 களுத்துறை தெற்குப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.