2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

எதிர்வரும் வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட உரை நாளை

உள்ளூர்November 6, 2025 · 9 months முன்2
எதிர்வரும் வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட உரை நாளை

எதிர்வரும் அடுத்த வருடம் 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு, அதாவது வரவு செலவுத் திட்ட உரை நாளையதினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாளை மாலை ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பைச் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, வரவு செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் மாதம் 8ஆம் திகதி முதல் 6 நாட்கள் இடம்பெறவுள்ளது.

இரண்டாவது வாசிப்பின் வாக்கெடுப்பு 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளதுடன், குழு நிலை விவாதம் நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் 17 நாட்கள் நடத்தப்படவுள்ளது.

மூன்றாவது வாசிப்பின் வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 5ஆம் திகதி பிற்பகல் 6 மணிக்கு நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.