2026 October 25, Sunday 🌧️ கொழும்பு 26° ⛈️ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை இடைநிறுத்த யோசனை

உள்ளூர்November 4, 2025 · 12 months முன்1
மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை இடைநிறுத்த யோசனை

எதிர்வரும் காலங்களில் மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நாடளாவிய ரீதியில் மீள் புதுப்பிக்கப்படும் வளங்களின் விரிவாக்கத் திட்டத்திற்கமைய, அதிகளவான காற்று ஆற்றல் வளம் கொண்ட பிரதேசமாக அடையாளங் காணப்பட்டுள்ள மன்னார் தீவில் மூன்று (03) காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

குறித்த கருத்திட்டங்களில் ஒரு கருத்திட்டமான தம்பபவனி காற்றாலை மின்னுற்பத்தி நிலைய நடவடிக்கைகள் 2021ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஏனைய கருத்திட்டங்களான 20 மெகாவோட் காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் 50 மெகாவோட் காற்றாலை மின்னுற்பத்தி நடவடிக்கைகள் முறையே இரண்டு தனியார் நிறுவனங்களால் 2025 டிசம்பர் மற்றும் 2026 டிசம்பர் மாதத்தில் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதேச மக்கள் சமர்ப்பித்துள்ள சுற்றாடல் மற்றும் சமூகப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, மன்னார் தீவு மக்களின் விருப்பமின்றி தொடர்ந்தும் குறித்த தீவில் காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாமென ஜனாதிபதியினால் ஏற்புடைய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, வலுசக்தி அமைச்சரால் அமைச்சரவைக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.