தங்க விலையில் மாற்றம்

இலங்கையில் நேற்றைய நாளுடன் உடன் ஒப்பிடும்போது, தங்கத்தின் விலை ரூ. 1,000 குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, கொழும்பு செட்டியார் வீதி தங்க சந்தையில் இன்று (04) காலை ஒரு பவுண்டு “22 காரட்” தங்கத்தின் விலை நேற்று ரூ. 294,000 ஆகக் காணப்பட்ட நிலையில் இன்று ரூ. 293,200 ஆகக் குறைந்துள்ளது.
இதற்கிடையில், நேற்று ரூ. 318,000 ஆக இருந்த “24 காரட்” தங்கத்தின் விலை இன்று ரூ. 317,000 ஆகக் குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் வீதியின் தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




