2026 October 25, Sunday ⛈️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகள் – பிரதமர் செயலாளர் சந்திப்பு. #Video

உள்ளூர்October 28, 2025 · 12 months முன்7
உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகள் – பிரதமர் செயலாளர் சந்திப்பு. #Video

உலக உணவுத் திட்டத்தின் (World Food Programme – Sri Lanka) இலங்கைக்கான பிரதிநிதியாகப் பதவியேற்ற பிலிப் வார்ட் (Philip Ward) மற்றும் பிரதி இயக்குநர் ரொபர்ட் ஒலிவர் (Robert Oliver) ஆகிய இருவரும் நேற்று (27) பிரதமரின் அலுவலகத்தில், பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி அவர்களைச் சந்தித்தனர்.

1968ஆம் ஆண்டு முதல் இலங்கையில் செயற்பட்டு வரும் உலக உணவுத் திட்டம் (WFP), இலங்கையில் உணவுப் பாதுகாப்பு, போசாக்குப் பாதுகாப்பு, பொருளாதார மற்றும் காலநிலைச் சவால்களை எதிர்கொள்ளும் சமூகங்களின் தாங்குதன்மை (Resilience) ஆகியவற்றை வலுப்படுத்துவதில் ஆதரவை வழங்கி வருகிறது.

2023 – 2027ஆம் ஆண்டுக்கான உலக உணவுத் திட்டத்தின் (WFP) வியூகத் திட்டம் (Strategic Plan) மற்றும் அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், குறிப்பாக உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்குப் பாதுகாப்பிற்கான அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டத்திற்கமைய உலக உணவுத் திட்டத்துடன் (WFP) இணைந்து செயற்படுவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

பிரதமரின் மேலதிகச் செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த மற்றும் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திரு. எம்.எச்.ஏ.எம். ரிஃப்லான் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.