2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!

சமூக ஊடக பதிவால் சபையில் முட்டிக்கொண்ட சதுரங்கா – சாணக்கியன். #Video

உள்ளூர்October 25, 2025 · 10 months முன்0
சமூக ஊடக  பதிவால் சபையில் முட்டிக்கொண்ட சதுரங்கா – சாணக்கியன். #Video

அரசாங்கத்தின் பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க அவர்களும் இன்னுமொரு பாராளுமன்ற உறுப்பினரும் இணைந்து Kingsberry Hotel இல் களுத்துறை மாவட்டத்திலுள்ள மதுபான Brewery License ஒன்றினை விற்பனை செய்வதற்கு முயற்சித்துள்ளனர். அமைச்சர் சதுரங்காவின் இலஞ்ச ஊழலை இரு தினங்களுக்கு முன் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முன்வைத்திருந்தார்.

அதனை தொடர்ந்து நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் 24.10.2025. துணை அமைச்சர் சதுரங்கா பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தினார். அவர் ஒரு சிறப்புரிமை (Privilege Issue) தொடர்பான விடையத்தை வெளிக்கொணரவில்லை, ஒரு தனிப்பட்ட அறிக்கையையே பாராளுமன்றத்தில் முன்வைத்தார். இதை கூட துணை சபாநாயகர் உறுதிப்படுத்தினார்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த, சிசிடிவி மற்றும் ஆவணங்களை சரிபார்க்குமாறு சாணக்கியன் எம்.பி அரசிடம் கேட்டுள்ளார். ஆனால் தெளிவாகவே, அமைச்சர் விசாரணை வேண்டாம் என்பதற்காகத்தான் ஆரம்பத்திலேயே சிறப்புரிமை விவகாரத்தை முன்வைக்காமல் தவிர்த்தார் என இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.