2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு.

உள்ளூர்August 20, 2025 · 12 months முன்1
பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு.

கல்வி அமைச்சு ஆசிரியர்கள் சேவை குறித்து முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

நாட்டில் தேவையான தரநிலைகளை பூர்த்தி செய்யாது கல்வி இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இனி ஆசிரியர் சேவையில் நியமிக்கப்பட மாட்டார்கள் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன, தனியார் பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் கல்வி இளங்கலைப் பட்டங்களின் தரத்தை மதிப்பிடுவதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எதிர்காலத்தில் ஆசிரியர் நியமனங்களுக்கு தேசிய தரநிலைகளுக்கு இணங்க வழங்கப்படும் பட்டங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், கல்வி அமைச்சின் இந்த அறிவிப்பு, ஆசிரியர் சேவையில் தரத்தை உறுதி செய்வதற்காகவும், தனியார் கல்வி நிறுவனங்களின் பட்டங்களின் நம்பகத்தன்மையை மதிப்பிடுவதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.