2026 October 23, Friday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 24° ⛈️ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மலையகத்திற்கான 42 ரயில் சேவைகள் இரத்து

உள்ளூர்October 21, 2025 · 1 year முன்4
மலையகத்திற்கான 42 ரயில் சேவைகள் இரத்து

மலையக ரயில் பாதையில் ரயில் தடம் புரண்டமை காரணமாக இன்று (21) கொழும்பு கோட்டையிலிருந்து திட்டமிடப்பட்டிருந்த கண்டி, மாத்தளை மற்றும் பிராந்திய ரயில் சேவைகள் உட்பட 22 பயணிகள் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பதுளை மற்றும் நானுஓயா வரை இயக்க திட்டமிடப்பட்ட 4 ரயில் சேவைகள் கண்டி ரயில் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த சேவைகள் திட்டமிட்ட நேரத்தில் கண்டி ரயில் நிலையத்திலிருந்து பதுளைக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

மேலும், நானுஓயா மற்றும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரை இயக்கப்படும் 04 ரயில் சேவைகள் பேராதனை மற்றும் கண்டி வரை பயணிக்கவுள்ளன. 

மலையக ரயில் பாதையில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் இந்த மூன்று நாட்களில் இரத்து செய்யப்பட்ட மொத்த ரயில் சேவைகளின் எண்ணிக்கை 42 ஆகும்.