2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இதுவரை 18 இலட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகள்

உள்ளூர்October 18, 2025 · 10 months முன்0
இதுவரை 18 இலட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகள்

நடப்பு ஆண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இம் மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 75,657 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, இந்தியாவிலிருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 396,274 ஆகும்.

மேலும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 167,886, ரஷ்யாவிலிருந்து 125,950, ஜெர்மனியிலிருந்து 111,677 மற்றும் சீனாவிலிருந்து 108,040 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

மேலும் பிரான்ஸிலிருந்து 90,250, அவுஸ்திரேலியாவிலிருந்து 81,040, நெதர்லாவிலிருற்து 53,922, அமெரிக்காவிலிருந்து 50,027 சுற்றுலாப் பயணிகளும் இந்த ஆண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இத்தாலியிலிருந்து 39,932, கனடாவிலிருந்து 37,606, ஸ்பெயினிலிருந்து 36,430, போலந்திலிருந்து 36,389 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.