ஊழல் பட்டியலில் 121 வது இடத்தில் இலங்கை.

ஊழல் அடிப்படையில் இலங்கைக்கு 121 ஆவது இடமென இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மேல் நீதிமன்ற நீதிபதி ரங்கா திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பலர் நேர்மையானவர்கள் இல்லை என்று கூறியுள்ள அவர், நாட்டில் ஊழல் அதிகரிப்பதற்கு இது ஒரு முக்கிய காரணி என்றும் தெரிவித்துள்ளார்.
– இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
டிரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் 180 நாடுகளை அழைத்து ஊழல் குறித்த அளவுகோலை உருவாக்குகிறது. ஊழல் குறைவாக உள்ள நாடு முதலிடத்தில் உள்ளது.
ஊழல் அதிகமாகவுள்ள நாடு 180 ஆவது இடத்திலுள்ளது. இலங்கை 121ஆவது இடத்திலுள்ளது. என அவர் தெரிவித்துள்ளார்.




