2026 October 25, Sunday 🌧️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

பாடசாலை அருகில் பெருந்தொகை தோட்டாக்கள்.

உள்ளூர்October 14, 2025 · 1 year முன்2
பாடசாலை அருகில் பெருந்தொகை தோட்டாக்கள்.

தலாவ, ரத்மல்கஹவெவ வீதியில் அமைந்துள்ள முந்துனேகம பாடசாலை அருகில் உள்ள சதுப்பு நிலப் பகுதியில், இன்று 2025 அக்டோபர் 14 அதிக அளவிலான வெற்றித் தோட்டா உறைகள் மற்றும் T-56 ரக தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தம்புத்தேகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சுமார் 15,000 வெற்றித் தோட்டா உறைகள் மற்றும் பல T – 56 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக பொலிஸார் வெளியிட்ட தகவலில், தோட்டாக்கள் பெரும்பாலும் சிதைவடைந்த நிலையில் காணப்பட்டதாகவும், அவை பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவை இராணுவ அல்லது பொலிஸ் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்டதற்கான தோட்டாக்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

மேலும், இந்த ஆயுதங்கள் அந்த இடத்திற்கு எப்படி வந்தன? யார் வைத்தனர்? என்பது தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.