2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கரூர் துயர் சம்பவம் – சி.பி.ஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.

உலகம்October 13, 2025 · 10 months முன்0
கரூர் துயர் சம்பவம் – சி.பி.ஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.

தமிழ்நாடு – கரூர் சம்பவம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், பொலிஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் த.வெ.க தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

இவ் வழக்கில், எதிர்மனுதாரராக சேர்க்கப்படாத த.வெ.க தலைவர் விஜய் பற்றி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெளியிட்ட கருத்துகளையும் நீக்கக் கோரி, த.வெ.க சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த வழக்கில், த.வெ.க தரப்பு வாதங்களை ஏற்று, சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மூன்று பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவையும் அமைத்துள்ளது.

மேலும், மக்களின் அடிப்படை உரிமைகள் சார்ந்த விவகாரமாக இதைக் கருதுவதாகவும், நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை மக்களின் உரிமை என்றும் உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.