2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

நாட்டின் இன்றைய வானிலை!

உள்ளூர்October 11, 2025 · 10 months முன்1
நாட்டின் இன்றைய வானிலை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்கள், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்தின் சில இடங்களில் 50 மி.மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யலாம்.

மேலும், ஏனைய பகுதிகளிலும் பிற்பகலில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் தெற்கு மாகாணங்களில் காலைவேளையில் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின்னலுடன் கூடிய மழைநேரங்களில், பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களுக்கு எதிராக பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.