2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

காஸாவில் போர் நிறுத்தம் அமுலுக்கு வரும் – ட்ரம்ப் உறுதி !

உலகம்October 5, 2025 · 11 months முன்2
காஸாவில் போர் நிறுத்தம் அமுலுக்கு வரும் – ட்ரம்ப் உறுதி !

காஸாவில் அமைதி திட்டத்தை ஹமாஸ் நடைமுறைப்படுத்திய உடனே காஸாவில் போர் நிறுத்தம் அமுலுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

மேலும், அமைதிப் பேச்சுவார்த்தைக்காக, காஸாவில் தற்காலிகமாக தாக்குதலை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காஸாவின் ஒருசில பகுதிகளில் இருந்து படைகளை திரும்பப் பெற இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த தகவலை ஹமாஸ் அமைப்பினரிடம் நாங்கள் தெரிவித்துவிட்டோம்.

காஸா அமைதி திட்டத்தை ஹமாஸ் நடைமுறைப்படுத்திய உடனே காஸாவில் போர் நிறுத்தம் அமுலுக்கு வரும். பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். மேலும் அடுத்த கட்ட நடவடிக்கையை நாங்கள் செய்து வருகிறோம். இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.