2026 September 23, Wednesday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது – இலங்கையில் மழை தொடரும்!உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு 200 முதல் 260 ஆண்டுகள் வரை கடூழியச் சிறை!இருநாட்டு நலன்களை முன்னேற்ற வலுவான நிகழ்ச்சி நிரல் – எரிக் மேயர்உலக கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு 169வது இடம்!நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு – விமல் வீரவன்ச மீது CCIB விசாரணை!இலஞ்சக் குற்றச்சாட்டில் முன்னாள் மேல் மாகாண சுகாதார அமைச்சர் கைது!ஊழல் மற்றும் ஒழுங்கீனங்களை கட்டுப்படுத்த புதிய கிரிக்கெட் சட்டமூலம்வெளிநாட்டு நிதியளிப்பு அபாயம் குறைந்தது – இலங்கைக்கு தர உயர்வு

ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் களமிறங்குவேன் – சஜித் !

உள்ளூர்August 16, 2025 · 1 year முன்3
ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் களமிறங்குவேன் – சஜித் !

நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் சிறுபான்மை பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

– இக் கூட்டத்தில் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது,

மீண்டுமொரு தேர்தலை எதிர்கொள்ளும் முன் பரந்துபட்ட எதிர்க்கட்சி கூட்டணியொன்றை அமைக்க வேண்டும். என பங்காளி கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி ஐக்கிய மக்கள் சக்திக்குள் நிலவும் முறுகல்கள் தீர்க்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதன்போது பரந்துபட்ட கூட்டணி அமைக்கப்பட்டாலும் அது தம்முடைய எதிர்க்கட்சி கூட்டணியுடன் இணைந்ததாக இருக்க வேண்டும் என சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மீண்டுமொரு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுமாயின் அப்போதும் தாமே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கப் போவதாகவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன், ரவூப் ஹக்கீம், றிஷாட் பதியுதீன் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.