2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ட்ரம்ப் வெளியிட்ட அதிர்ச்சி பட்டியல் !

உலகம்September 18, 2025 · 11 months முன்2
ட்ரம்ப் வெளியிட்ட அதிர்ச்சி பட்டியல் !

சட்ட விரோதமாகப் போதைப்பொருள் தயாரித்தல் மற்றும் கடத்தலில் ஈடுபடும் 23 நாடுகளின் பட்டியலை அமெரிக்கா பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டார்.

இவ் பட்டியலில் இந்தியாவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ட்ரம்பின் இச் செயலால் இந்தியா பெரும் அதிர்சிக்குள்ளாகியுள்ளது.

23 நாடுகளைக் கொண்ட அந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவின் பெயரையும் அவர் சேர்த்து இருந்தார்.

– மேலும் அந்த பட்டியலில் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளதாவது,

போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் அவற்றின் கடத்தலில் முக்கியமாக ஈடுபட்டுள்ள இந்த நாடுகளின் செயலால் அமெரிக்கா மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது.

சட்டவிரோத போதைப்பொருள்கள் கடத்தலால் அமெரிக்காவில் அவசர நிலை உருவாகியுள்ளது. இதில், 18 முதல் 44 வயதுடைய அமெரிக்கர்களின் மரணத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும் பொது சுகாதார நெருக்கடியும் அடங்கும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.