2026 September 29, Tuesday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 30° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.மத்திய மாகாண லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்.நிதி மோசடி மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கிரிஷ் வழக்கு விசாரணை.இலங்கை சார்பில் தேசிய உரையாற்றவுள்ளார் வெளிவிவகார அமைச்சர்.யோஷித ராஜபக்ஷ தொடர்பான நிதித்தூய்தாக்கல் வழக்கு நவம்பர் 3க்கு ஒத்திவைப்பு.செப்டம்பர் 28 நடைபெறவிருந்த மஹாபொல விழா புதிய திகதி அறிவிக்கப்படும் வரை ஒத்திவைப்பு.

பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.

உள்ளூர்September 29, 2026 · 37 minutes முன்2
பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.

செப்டெம்பர் 29 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 1 ஆம் திகதி வரையான விஜயமொன்றிற்காக அமெரிக்க பசிபிக் இராணுவத்தின் (USARPAC) பிரதி கட்டளையிடும் ஜெனரலான, லெஃப்டினன் ஜெனரல் ஜொயெல் ‘ஜேபி’ வவல் இன்று கொழும்பை வந்தடைந்தார். 

அவரே இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க இராணுவத்தின் மிக உயர் பதவிவகிக்கும் அதிகாரியாவார். அவரது விஜயம், அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையே வளர்ந்துவரும் இராணுவங்களுக்கிடையிலான ஒத்துழைப்பில் ஒரு மிக முக்கி​ய மைல்கல்லினைக் குறிக்கிறது. 

“லெஃப்டினன் ஜெனரல் வவல் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பயணமானது, இலங்கையுடனான எமது பாதுகாப்புப் பங்காண்மையின் வளர்ந்து வரும் வலிமையினையும், பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதில் எமக்கிருக்கும் பகிரப்பட்ட உறுதிப்பாட்டினையும் பிரதிபலிக்கிறது.” என அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர் தெரிவித்தார். “ஒன்றாகப் பயிற்சி செய்தல், ஒருங்கிணைந்த செயற்பாட்டுத் திறனை பலப்படுத்துதல் மற்றும் நெருக்கடிகளின்போது பதிலளிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஆற்றலைக் கூர்மைப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், எமது மக்களைப் பாதுகாப்பதற்கும் இந்து சமுத்திரத்திரப் பிராந்தியத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் நாங்கள் சிறப்பான தயார்நிலையினைப் பேணுகிறோம்.” என அவர் மேலும் தெரிவித்தார். 

ஒருங்கிணைந்த செயற்பாட்டுத் திறன், தயார்நிலை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு போன்ற விடயங்களை பலப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, சிரேஷ்ட இலங்கை இராணுவ அதிகாரிகளை லெஃப்டினன் ஜெனரல் வவல் சந்திப்பார். இக்கலந்துரையாடல்களில் எதிர்வரும் கூட்டு இராணுவப் பயிற்சிகள், திறன் மேம்பாட்டு முன்முயற்சிகள் மற்றும் மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு ஆகியபணிகளில் ஒத்துழைப்பு போன்ற விடயங்கள் உள்ளடங்கியிருக்கும். அடுத்த தலைமுறை இராணுவத் தலைவர்கள் மத்தியில் லெஃப்டினன் ஜெனரல் வவல் உரையாற்றுவார். இதன்போது பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உதவி செய்வதில் தொழில்முறை இராணுவப் படைகள் வகிக்கும் முக்கிய பங்கு குறித்து அவர் கவனம் செலுத்துவார். 

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கான எமது நிலையான உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டும் லெஃப்டினன் ஜெனரல் வவல் அவர்களின் விஜயமானது, மே மாதத்தில் வெற்றிகரமாக நடைபெற்ற Land Forces Talks கலந்துரையாடல்களின் உத்வேகத்தின் அடிப்படையில் இடம்பெறுவதுடன், அமெரிக்க-இலங்கை பங்காண்மையின் நடைமுறை சார்ந்த, முடிவுகளை மையமாகக் கொண்ட தன்மையினைப் பிரதிபலிக்கிறது.