2026 September 28, Monday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 30° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
மத்திய கிழக்கு பதற்றத்தால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு.ஐந்து ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பதவி உயர்வுகள் இந்த ஆண்டிற்குள் வழங்கப்படும்.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் வாய்ப்பு.வட மாகாணத்தின் சிறந்த பிரதேச செயலகங்கள் கௌரவிக்கப்பட்டன.IMF உறவை திடீரென துண்டித்தால் பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படலாம் என எச்சரிக்கை.வியட்நாம் இரண்டாம் இடம், லாவோஸ் மூன்றாம் இடம்.எல்நினோ–லாநினா மாற்றங்களை தீவிரமாக கவனிக்க வேண்டும் – சஜித்.மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் நினைவேந்தலில் பங்கேற்றார்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் வாய்ப்பு.

உள்ளூர்September 28, 2026 · 3 hours முன்2
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் வாய்ப்பு.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.