2026 September 25, Friday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 34°
LIVE
தனது ஜனாதிபதி பதவிக்காலத்தில் சீனாவுடன் பேணிய இராஜதந்திர உறவுகளை மைத்திரிபால சிறிசேன நினைவுகூர்ந்துள்ளார்.இலங்கை–இந்திய உறவுகளை முன்னிறுத்திய ரணில்–சந்தோஷ் ஜா சந்திப்புஇலங்கையின் தொழிற்கல்வித் துறைக்கு UAE முதலீட்டு ஆர்வம்அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு வழங்க ஜம்இய்யதுல் உலமா உறுதிவர்த்தகக் கப்பல் மீட்ட 25 பேரை பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்த கடற்படைஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு இன்று விடுமுறைநாமல் தொடர்பான 70 மில்லியன் இலஞ்ச வழக்கில் கைது22வது திருத்தத்திற்கு எதிராக மனசாட்சிப்படி வாக்களிக்குமாறு திலித் கோரிக்கை

அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு வழங்க ஜம்இய்யதுல் உலமா உறுதி

உள்ளூர்September 25, 2026 · 3 hours முன்16
அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு வழங்க ஜம்இய்யதுல் உலமா உறுதி

சவூதி அரேபியா இராச்சியத்தின் 96ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு,
இலங்கைக்கான சவூதி அரேபியா தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு
வரவேற்பு நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத்
தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ சாணக்கியன்
இராசமாணிக்கம் அவர்கள் கலந்து கொண்டார்.


இந்நிகழ்விற்கான அழைப்பை இலங்கைக்கான சவூதி அரேபியா தூதரகத்தின்
பொறுப்பதிகாரி மேன்மைதங்கிய யாசர் அப்துல்ரஹ்மான் அல்-ஹஸ்மி (H.E. Yaser
Abdulrahman Al-Hazme) அவர்கள் விடுத்திருந்தார்.

வழமையாக சாணக்கியன்அவர்கள் இவ் நிகழ்வில் பங்கு பற்றி வருகின்றார் என்பது
குறிப்பிடத்தக்கது.

இதன்போது, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க்
அர்கம் நூராமித் அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்
சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சந்திப்பின்போது, சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள
இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவின் விடுதலைக்குத் தேவையான முழுமையான
ஆதரவை வழங்குவதாக ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் சாணக்கியனிடம்
உறுதி அளித்தார்.

இந்நிலையில், சவூதி அரேபியா இராச்சியத்தின் தேசிய தினத்தை முன்னிட்டு
சவூதி அரேபிய மக்களுக்கும், இலங்கைக்கான சவூதி அரேபியா தூதரகத்திற்கும்
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்கள் மனமார்ந்த
வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.