2026 September 24, Thursday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 35°
LIVE
அனோஜனை காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்த வேண்டும் – ITAKசபாநாயகர் முன்னிலையில் ஹபீப் ரிஃபான் சத்தியப்பிரமாணம்உபாதையால் ஹசரங்க அணியிலிருந்து விலகல்மூன்று நாள் அமெரிக்க விஜயத்தை தொடங்கிய ஜி ஜின்பிங்அனோஜனை மீட்க அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைநீதித்துறை திருத்தம் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை; மழை பாதிப்பு தொடரும்எரிபொருள் விலையில் மாற்றமா? மானியமா? பேச்சுவார்த்தை தீவிரம்

நீதித்துறை திருத்தம் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்

உள்ளூர்September 24, 2026 · 3 hours முன்8
நீதித்துறை திருத்தம் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை அமைப்புகள் திருத்தச் சட்டமூலம் ஆகியவற்றின் இரண்டாம் வாசிப்பு மீதான பாராளுமன்ற விவாதம் இன்று (24) ஆரம்பமாகவுள்ளது. 

இவ்விரு சட்டமூலங்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். 

அதில், 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்குச் சர்வஜன வாக்கெடுப்புத் தேவையில்லை என்றும், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு விசேட பெரும்பான்மையுடன் மட்டுமே அதை நிறைவேற்ற முடியும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

அதேபோன்று, நீதித்துறை அமைப்புகள் திருத்தச் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

இதற்கமைய, இன்று மற்றும் நாளை (25) இது தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளதுடன், நாளை மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. 

இதேவேளை, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை அமைப்புகள் திருத்தச் சட்டமூலம் ஆகியவற்றுக்கு பொது நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவும் அங்கீகாரம் அளித்துள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தலைமையில் இக்குழு கூடியதுடன், அங்கு குறித்த இரு சட்டமூலங்கள் தொடர்பாகவும் சட்டமா அதிபர், குழுவுக்கு விளக்கமளித்ததாக பாராளுமன்றத் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.