2026 November 6, Friday ⛅ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

2027 நிதியாண்டுக்கான முக்கிய சட்டமூலம் வர்த்தமானியில்!

உள்ளூர்September 22, 2026 · 1 month முன்8
2027 நிதியாண்டுக்கான முக்கிய சட்டமூலம் வர்த்தமானியில்!

2027 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது. 

குறிப்பிட்ட சட்டமூலத்திற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி கிடைத்திருந்த நிலையில், அது நேற்று (21) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கமைய, 2027 ஆம் நிதியாண்டிற்​கான அரசாங்கத்தின் மதிப்பீடு செய்யப்பட்ட செலவினம் ரூ. 4,992,773,388,000 என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 

இம்முறை ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் முதலாம் வாசிப்பு அடுத்த மாதம் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரை நவம்பர் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. 

வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், குழுநிலை விவாதம் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.