2026 September 21, Monday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
SLMC தேசியப் பட்டியல்: ஹபீப் ரிபான் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!ஜூலையின் 7.2% இலிருந்து ஆகஸ்டில் 8.1% ஆக பணவீக்கம் அதிகரிப்புஅனோஜன் குடும்பத்துக்கு சஜித் உறுதி – விடுதலைக்காக தொடரும் முயற்சிவிமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜர் – பிடியாணையை திரும்பப் பெற கோரிக்கை!உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் ஜனாதிபதி மன்னிப்பை நாடும் ஞானசார தேரர்!தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய விபத்து – 10க்கும் மேற்பட்டோர் காயம்!மின்னல் மற்றும் பலத்த காற்று – மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்!உலகச் சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்தாலும் மானியத்தில் கட்டுப்படுத்துவோம் – ஜனாதிபதி!

ஜூலையின் 7.2% இலிருந்து ஆகஸ்டில் 8.1% ஆக பணவீக்கம் அதிகரிப்பு

உள்ளூர்September 21, 2026 · 1 hour முன்2
ஜூலையின் 7.2% இலிருந்து ஆகஸ்டில் 8.1% ஆக பணவீக்கம் அதிகரிப்பு

2026 ஒகஸ்ட் மாதத்திற்கான தேசிய முதன்மை பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு 8.1% ஆக அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

திணைக்களம் இன்று (21) வெளியிட்டுள்ள இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் அடிப்படையிலான பணவீக்கத்தின் படி, ஜூலை மாதத்தில் 7.2% ஆக பதிவாகியிருந்த பணவீக்கமானது, ஓகஸ்ட் மாதத்தில் 8.1% ஆக உயர்வடைந்துள்ளது. 

உணவுப் பணவீக்கமானது கடந்த ஜூலை மாதத்தில் நிலவிய 4.9% இலிருந்து ஒகஸ்ட் மாதத்தில் 6.6% வரை அதிகரித்துள்ளது. 

அதேவேளை, உணவு அல்லா பணவீக்கமானது ஜூலை மாதத்தில் 9.2% ஆக பதிவாகியிருந்தது. 

எனினும் ஒகஸ்ட் மாதத்தில் 9.3 ஆக உயர்வடைந்துள்ளது. 

அதேநேரம் போக்குவரத்துக்கான பணவீக்கமும் கடந்த ஒகஸ்ட் மாதத்தில் 19.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

இது கடந்த ஜூலை மாதத்தில் 18.9 சதவீதமாக காணப்பட்டதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.