2026 September 20, Sunday 🌧️ கொழும்பு 27° 🌧️ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 23° ⛈️ மட்டக்களப்பு 32°
LIVE
சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு!இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது இங்கிலாந்துமழையுடன் மண்சரிவு அபாயமும் – மக்கள் விழிப்புடன் இருங்கள்!பல பகுதிகளில் கனமழை – சில இடங்களில் 100 மி.மீ.க்கும் அதிகம்!மோட்டார் வாகனப் பதிவு பிரச்சினைகளுக்கு புதிய WhatsApp இலக்கம்!வெளிநாட்டில் உள்ள பெசில் ராஜபக்ஷவை கண்டறிய சர்வதேச நடவடிக்கை!பிள்ளைகளின் கல்வி, ஒழுக்கம் குறித்து சந்திரிகா உருக்கமான பதிவு!ஸ்மார்ட் பலகைகளுக்காக பெற்றோரிடம் பணம் வசூலிக்க வேண்டாம் – பிரதமர் அறிவுறுத்தல்!

பல பகுதிகளில் கனமழை – சில இடங்களில் 100 மி.மீ.க்கும் அதிகம்!

உள்ளூர்September 20, 2026 · 3 hours முன்4
பல பகுதிகளில் கனமழை – சில இடங்களில் 100 மி.மீ.க்கும் அதிகம்!

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.