2026 September 16, Wednesday ⛅ கொழும்பு 29° ⛈️ யாழ்ப்பாணம் 31° ⛅ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
சட்டவிரோத வாகன வைத்திருப்பு குற்றச்சாட்டு – வழக்கு நீதிமன்றத்தில்!சிங்கப்பூர் பயணத்திற்கு முன் FCID கடிதம் கையளிப்பு – குடும்பம் கூறும் பதில்!FCID ஆஜருக்கு இன்னும் சில நாட்கள் – சிங்கப்பூர் சென்றார் ஷிரந்தி!மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மாகாணங்களுக்கு மழை எச்சரிக்கை!ஊழலுக்கு கட்சிப் பேதமின்றி நடவடிக்கை – ஹரிணி!நெல் கொள்முதல் தடைப்படாமல் தொடர அரசு நடவடிக்கை!MiG போர் விமானக் கொள்முதல் – மீண்டும் சூடு பிடிக்கும் விசாரணை!ஜனாதிபதி செயலகத்தை பார்வையிட்ட மாணவர்களுக்கு பிரதமரின் செய்தி!

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மாகாணங்களுக்கு மழை எச்சரிக்கை!

உள்ளூர்September 16, 2026 · 5 hours முன்7
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மாகாணங்களுக்கு மழை எச்சரிக்கை!

இலங்கைக்கு அருகில் கீழ் வளிமண்டலத்தில் நிலவிய தளம்பல் நிலை நாட்டை விட்டு விலகிச் செல்வதால், அதன் தாக்கம் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இந்தப் பகுதிகளின் சில இடங்களில் சுமார் 75 மி.மீ அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.