2026 September 14, Monday 🌧️ கொழும்பு 30° 🌧️ யாழ்ப்பாணம் 33° 🌧️ கண்டி 31° ⛈️ மட்டக்களப்பு 31°
LIVE
உலக தடகளத்தில் இலங்கைக்கு பொன்னான தருணம்!செப்டம்பர் 13 நாட்களில் 2,146 டெங்கு நோயாளர்கள்!வறட்சியால் யாலாவின் 1, 2 மண்டலங்கள் மூடப்பட்டன!மத்திய கிழக்கு பதற்றம்; எண்ணெய் விலை தொடர்ந்து ஏற்றம்!5 மாகாணங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!22ஆவது திருத்தத்தை தோற்கடிக்க மக்கள் சக்தி திரட்டும் சஜித்!36 பிரதேச செயலகப் பிரிவுகள் வறட்சியின் பிடியில்!இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை 15 இலட்சத்தை கடந்தது!

மத்திய கிழக்கு பதற்றம்; எண்ணெய் விலை தொடர்ந்து ஏற்றம்!

உலகம்September 14, 2026 · 3 hours முன்2
மத்திய கிழக்கு பதற்றம்; எண்ணெய் விலை தொடர்ந்து ஏற்றம்!

உலக சந்தையில் மீண்டும் இன்றைய தினம் இரண்டு சதவீதத்திற்கும் அதிகமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. 

சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் குழாய் ஒன்று மூடப்பட்டமை, சவூதி அரேபியா மீதான புதிய ஹூதி தாக்குதல்கள் மற்றும் மத்திய கிழக்கில் கப்பல்கள் மீதான ஈரானியத் தாக்குதல்கள் காரணமாக இவ்வாறு சடுதியாக கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. 

அதற்கமைய ப்ரெண்ட் ரக கச்சா எண்ணெய் 3.03% உயர்ந்து பீப்பாய் ஒன்று 107.51 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. 

அதேநேரம் WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 2.72% உயர்ந்து 102.08 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகின்றது. 

ஈராக்கில் இருந்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால், உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான சவூதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் வெள்ளிக்கிழமை மூடப்பட்டதால், விநியோகத்திற்கான அபாயங்கள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் இன்று எண்ணெய் விலைகள் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஹோர்முஸ் நீரிணையை தவிர்த்து சவூதி அரேபியா தனது ஏற்றுமதியை மாற்று வழியில் அனுப்ப உதவிய இந்த எண்ணெய் குழாயின் இழப்பு, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 4% வரை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.