2026 September 4, Friday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 29° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
15 மனுக்களின் விசாரணையை முடித்த உயர்நீதிமன்றம்!ஊழல் எதிர்ப்புத் திருத்தம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் முக்கிய தீர்மானம் எதிர்பார்ப்பு!பெண்ணிய இயக்கத்தின் முன்னோடி குளோரியா ஸ்டெய்னம் காலமானார்!வறட்சியால் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!பொலிஸாருக்கு புதிய பதவி உயர்வு முறைமை – ஜனாதிபதி!உலை எண்ணெய் மற்றும் நெப்தா விலை இன்று குறைகிறது!இலஞ்ச ஆணைக்குழுவில் ஆஜரான ஜோன்ஸ்டன் கைது!CPL சாதனையை முறியடித்த தசுன் ஷானக!

பெண்ணிய இயக்கத்தின் முன்னோடி குளோரியா ஸ்டெய்னம் காலமானார்!

உலகம்September 4, 2026 · 2 hours முன்4
பெண்ணிய இயக்கத்தின் முன்னோடி குளோரியா ஸ்டெய்னம் காலமானார்!

பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக போராடிய அமெரிக்க எழுத்தாளரும், விரிவுரையாளரும், பெண்ணிய செயற்பாட்டாளருமான குளோரியா ஸ்டெய்னம் காலமானதாக அவரது அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

பெண்களுக்கான ‘மிஸ்’ (Ms. Magazine) செய்தித்தாளின் இணை நிறுவனரான இவர், 1960 களின் இறுதிப் பகுதியிலிருந்து பெண்ணிய இயக்கத்திற்குத் தலைமை தாங்கியதுடன், பல தலைமுறைப் பெண்களுக்கு ஊக்கமளித்தவர் ஆவார்.

ஸ்டெய்னம் தன்னை “சமூக மாற்றத்தின் தொழில்முனைவோர்” என்று வர்ணித்துக் கொண்டார்.

1971 ஆம் ஆண்டில், முன்னாள் அமெரிக்க பிரதிநிதிகள் பெல்லா அப்ஜுக், ஷர்லி சில்ஹோம் மற்றும் எழுத்தாளர் பெட்டி ஃபிரீடன் ஆகியோருடன் இணைந்து தேசிய பெண்கள் அரசியல் கூட்டமைப்பை (National Women’s Political Caucus) ஸ்டெய்னம் தோற்றுவித்தார்.

தொழிலாளர் சங்கம், பெண்கள் ஊடக மையம் (Women’s Media Center) மற்றும் பெண்களுக்கான மிஸ் அறக்கட்டளை

(Ms. Foundation for Women) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளையும் அவர் உருவாக்கினார்.

2013 ஆம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவருக்கு அமெரிக்காவின் உயரிய குடிமக்கள் விருதான ஜனாதிபதி சுதந்திரப் பதக்கத்தை (Presidential Medal of Freedom) வழங்கி கௌரவித்தார்.

ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் சம உரிமைகளைப் பெற வேண்டும் என்று வலியுறுத்திய குளோரியா ஸ்டெய்னம், தனது வாழ்நாள் முழுவதும் பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.