2026 September 4, Friday ⛅ கொழும்பு 30° ☀️ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 28° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
பெண்ணிய இயக்கத்தின் முன்னோடி குளோரியா ஸ்டெய்னம் காலமானார்!வறட்சியால் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!பொலிஸாருக்கு புதிய பதவி உயர்வு முறைமை – ஜனாதிபதி!உலை எண்ணெய் மற்றும் நெப்தா விலை இன்று குறைகிறது!இலஞ்ச ஆணைக்குழுவில் ஆஜரான ஜோன்ஸ்டன் கைது!CPL சாதனையை முறியடித்த தசுன் ஷானக!ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஆணைக்குழுவில் ஆஜர்!இலஞ்சம், ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் நாமல்!

உலை எண்ணெய் மற்றும் நெப்தா விலை இன்று குறைகிறது!

உள்ளூர்September 4, 2026 · 1 hour முன்3
உலை எண்ணெய் மற்றும் நெப்தா விலை இன்று குறைகிறது!

இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உலை எண்ணெய் (Furnace Oil) மற்றும் நெப்தா (Naphtha) ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. 

இதன்படி, இதுவரை 248 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட உலை எண்ணெய் ஒரு லீற்றரின் விலை 38 ரூபாவால் குறைக்கப்படுகின்றது. 

அதன் புதிய விலை 210 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம் 210 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நெப்தா ஒரு லீற்றரின் விலை 35 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 175 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.