2026 September 3, Thursday 🌧️ கொழும்பு 28° ☀️ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 33°
LIVE
நிலக்கரி கப்பல்கள் வந்ததும் மின் உற்பத்தி சீராகும்!5ஆம் தர புலமைப்பரிசிலில் தமிழ் மொழிமூலம் சாதனை!தோனியின் சாதனையை கடந்த ரிஷப் பண்ட்!அஸ்வெசும முதியோர் உதவித்தொகை இன்று முதல் கிடைக்கும்!வானிலையில் மாற்றம் – பல பகுதிகளுக்கு மழை முன்னறிவிப்பு!2026 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியீடு!ஐந்தாம் தர புலமைப்பரிசில் பெறுபேறுகள் இன்று வெளியீடு!நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – நீர் வழங்கல் சபை அறிவிப்பு!

அஸ்வெசும முதியோர் உதவித்தொகை இன்று முதல் கிடைக்கும்!

உள்ளூர்September 3, 2026 · 2 hours முன்4
அஸ்வெசும முதியோர் உதவித்தொகை இன்று முதல் கிடைக்கும்!

2026 ஒகஸ்ட் மாதத்திற்குரிய 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு இன்று (03) உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது. 

இதற்கமைய, அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் செலுத்தும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 618,352 முதியோர்களுக்காக 3,091,760,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

மேலும், இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 78,260 முதியோர்களுக்காக 391,300,000 ரூபாய் நிதி வைப்பிலிடப்படவுள்ளது. 

உரிய பயனாளிகள் இன்று (3) முதல் தங்களுக்கான முதியோர் கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.