2026 September 2, Wednesday ☀️ கொழும்பு 29° ☀️ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பெறுபேறுகள் இன்று வெளியீடு!நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – நீர் வழங்கல் சபை அறிவிப்பு!கிழக்கு கொள்கலன் முனையப் பணிகளில் முறைகேடு – சஜித் குற்றச்சாட்டு!கங்கை சீற்றத்தில் சிக்கிய நூற்றாண்டு பழமையான கோவில்!விஜித ஹேரத்தின் இரண்டு நாள் ஐக்கிய அரபு அமீரக விஜயம்!முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ சடலமாக மீட்பு!காஸாவில் சுகாதாரப் பேரழிவைத் தடுக்க இன்னும் காலம் உள்ளது – WHO!ஆரோக்கியத்திற்கு விலை உயர்ந்த பழங்கள் அவசியமா?

நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – நீர் வழங்கல் சபை அறிவிப்பு!

உள்ளூர்September 2, 2026 · 2 hours முன்13
நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – நீர் வழங்கல் சபை அறிவிப்பு!

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் நாளை (03) முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாகவே, நாளை இரவு 8.00 மணி முதல் வெள்ளிக்கிழமை (04) இரவு 8.00 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது. 

இதற்கமைய நுகேகொடை, கொஹுவலை, தெஹிவளை, கல்கிசை, ரத்மலானை, மொறட்டுவை, ராவதாவத்தை, சொய்சாபுரம், அங்குலானை, இதிபெத்த, கடுபெத்த, கல்தெமுல்ல, மோதறை, கொரளவெல்ல, எகொடவுயன மற்றும் கட்டுக்குருந்த ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது. 

அத்துடன், செத்சிறிபாய, ஹிம்புடான, உடுமுல்ல வீதி, மாளிகாகொடெல்ல, வங்கிச் சந்தி வீதி, டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை, ஹவ்லொக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை வீதி, ஜெயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய பகுதிகளுக்கும் இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீர் விநியோகம் நிறுத்தப்படுவதால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, குறிப்பிட்ட காலப்பகுதியில் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.