2026 October 17, Saturday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 26° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

காஸாவில் சுகாதாரப் பேரழிவைத் தடுக்க இன்னும் காலம் உள்ளது – WHO!

உலகம்September 2, 2026 · 2 months முன்7
காஸாவில் சுகாதாரப் பேரழிவைத் தடுக்க இன்னும் காலம் உள்ளது – WHO!

காஸா முனையில் நிலவும் கடுமையான பொது சுகாதார நெருக்கடியானதுஇ குளிர்காலம் மற்றும் குளிர்கால மழையின்போது மேலும் மோசமடையும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

நேற்று வெளியிடப்பட்ட தகவல்களின்படி, காஸாவில் நீரின் தரம் கணிசமாக மோசமடைந்துள்ளதாகவும்இ வயிற்றுப்போக்கு கடுமையாக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

குறைந்தபட்ச அளவிலான தண்ணீரைக் கூட வழங்கத் தவறியுள்ள சூழ்நிலையில், நீரின் தரம் மற்றும் நீர் மாசுபடுதல் ஆகியவை பெரும் பிரச்சினையாகத் தொடர்வதாக தகவல்கள் கூறுகின்றன.

குளிர்கால மழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு, கழிவுநீரை மக்கள் தூங்கும், சமைக்கும் இடங்களுக்குக் கொண்டு சேர்த்துவிடும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுமார் 6,700 நீர் மாதிரிகள் சோதிக்கப்பட்டதில், நுண்ணுயிரிகளால் ஏற்படும் மாசுபடுதல் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

ஜனவரியில் 6 சதவீதத்திற்கும் குறைவாக இருந்த மாசுபடுதல், ஆகஸ்ட் மாதத்தில் 18 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

அத்துடன் மார்ச் மாதத்திற்குப் பிறகு கடுமையான வயிற்றுப்போக்கு பாதிப்புகள் இரு மடங்காக அதிகரித்துள்ளன.

இருப்பினும், ஒரு பெரும் சுகாதாரப் பேரழிவைத் தடுத்து நிறுத்த இன்னும் காலம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு அதிகாரி ஒருவர், மனிதாபிமான உதவிகள் எந்தவிதத் தடையுமின்றி உடனடியாக அனுமதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.