2026 October 17, Saturday 🌧️ கொழும்பு 28° 🌧️ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 24°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கடும் வறட்சி – நீர் விநியோகத்திற்கு நேரக் கட்டுப்பாடு!

உள்ளூர்August 31, 2026 · 2 months முன்13
கடும் வறட்சி – நீர் விநியோகத்திற்கு நேரக் கட்டுப்பாடு!

வறட்சியான வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சைக் குளத்தின் நீரின் அளவு வீழ்ச்சியடைந்துள்ளதால், அப்பகுதியில் நீர் விநியோகத்தை ஒரு நாளைக்கு 4 மணித்தியாலங்களுக்குக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் குறைந்துள்ளதால், தினசரி முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக அதன் தலைவர் ஏ.எம்.பி.சி.டி.பண்டார தெரிவித்தார். 

இருப்பினும், நாடு முழுவதும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்குச் சொந்தமான நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வழமை போல் இயங்கி வருவதாகத் தலைவர் குறிப்பிட்டார். 

அந்த நிலையங்களில் அதிகபட்ச கொள்ளளவில் நீர் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். 

இலங்கையில் ஒரு நாளைக்கு சுமார் 28 லட்சம் கன மீற்றர் நீர் உற்பத்தி செய்யப்படுவதுடன், அதில் 23 முதல் 24 சதவீதமான நீர் பாரிய நீர்த்தேக்கங்களிலிருந்து பெறப்படுவதாகத் தலைவர் தெரிவித்தார். 

மேலும் 65 சதவீதமான நீர் ஆறுகள் மற்றும் ஓடைகள் போன்ற நீர் ஆதாரங்களிலிருந்து பெறப்படுவதாகவும், அதில் சுமார் 6 லட்சம் கன மீற்றர் நீர் களனி கங்கையிலிருந்து பெறப்படுவதாகவும் அவர் கூறினார். 

நாடு முழுவதும் பெறப்படும் நீரில் சுமார் மூன்றில் ஒரு பங்கு களனி கங்கையிலிருந்தே பெறப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

இதனிடையே, வறட்சியான வானிலையினால் மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு மட்டுமே ஓரளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தலைவர் குறிப்பிட்டார். 

மொனராகலை மாவட்டத்தின் பிபிலை மற்றும் மெதகம ஆகிய பகுதிகளில் நீர் ஆதாரங்களில் நீர் பற்றாக்குறை நிலவுவதால், நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.