2026 October 17, Saturday ⛅ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இந்தியா–இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து முக்கிய பேச்சு!

உள்ளூர்August 29, 2026 · 2 months முன்9
இந்தியா–இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து முக்கிய பேச்சு!

இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இந்தியாவின் பாதுகாப்புச் செயலர் ராஜேஷ் குமார் சிங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

புது டெல்லியில் நடைபெற்ற உயர் மட்டச் சந்திப்பில், இருவரும், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரைடியுள்ளனர்.

அத்துடன் இரண்டு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தநிலையில், அண்டை நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வழிநடத்தும் முக்கியக் கட்டமைப்பான ‘இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் இதுவரை எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்களும் இந்த சந்திப்பின்போது மதிப்பீடு செய்யப்பட்டன.

மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா சென்றுள்ள இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இந்தியாவில் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.