2026 August 29, Saturday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 25° 🌧️ மட்டக்களப்பு 33°
LIVE
காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளைப் புறக்கணிக்க தமிழரசுக் கட்சி தீர்மானம்.பொலன்னறுவை நீர்த்தேக்கங்களில் வேகமாக குறையும் நீர்மட்டம்!இந்தியா–இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து முக்கிய பேச்சு!பசிபிக் கடல் வெப்பநிலை உயர்வு – உலக வானிலையில் பெரும் மாற்றம்!இலங்கை கடற்பரப்புக்கு அருகே ஈரானிய கப்பல்கள் நங்கூரம்!பாண் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையில் மாற்றம் வருமா?இலங்கை உள்ளிட்ட நாடுகளின் மீட்புக் குழுக்களுக்கு அனுமதி இல்லை!நிரம்பி வழியும் புதிய ஏரி – மற்றொரு பெருவெள்ளம் வருமா?

இலங்கை கடற்பரப்புக்கு அருகே ஈரானிய கப்பல்கள் நங்கூரம்!

உள்ளூர்August 29, 2026 · 2 hours முன்5
இலங்கை கடற்பரப்புக்கு அருகே ஈரானிய கப்பல்கள் நங்கூரம்!

இலங்கையின் பிரத்யேகப் பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாக வெளியுறவு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். 

இருப்பினும், குறித்த கப்பல்கள் இலங்கைக்குச் சொந்தமான நிலப்பரப்பிற்கு வெளியே இருப்பதால், அவை தொடர்பாக இலங்கைக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்றும், அக்கப்பல்களுக்கு எந்தவொரு வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். 

தங்கள் நாட்டு துறைமுகங்களை நோக்கி பயணிக்க முடியாமல் சுமார் 20 ஈரானிய எரிபொருள் கடற்போக்குவரத்து கப்பல்கள் தற்போது இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாக ‘TankerTrackers’ இணையதளம் தெரிவித்துள்ளது. 

அமெரிக்கா விதித்துள்ள கடற்படைத் தடை காரணமாகவே குறித்த கப்பல்களால் ஈரானிய துறைமுகங்களை நோக்கி பயணிக்க முடியாமல் போயுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. 

இப்பின்னணியில், ஈரான் கொடியுடனான சுமார் 13 எரிபொருள் கடற்போக்குவரத்து கப்பல்களும், தடைகளைத் தவிர்க்கும் நிழற்படை (‘Shadow Fleet’) கப்பல்கள் சிலவும் பாதுகாப்புத் தேடி இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்திற்கு அருகில் தற்போது நங்கூரமிட்டுள்ளதாக ‘TankerTrackers’ இணையதளம் கூறுகிறது. 

எனினும், அந்த இணையதளம் சுட்டிக்காட்டுவது யாதெனில், குறித்த கப்பல்களில் தற்போது எரிபொருள் எதுவும் இல்லை என்பதாகும். 

கடந்த மார்ச் மாதம் இலங்கை கரைக்கு 19 கடல் மைல் தொலைவில் இருந்த ‘ஐரிஷ் டேனா’ (Iris Dena) கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தி மூழ்கடித்த பின்னணியில், தற்போது இலங்கையை ஒட்டி நங்கூரமிட்டுள்ள கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், சர்வதேச சட்டத்தின் கீழ் நடுநிலை நாட்டின் கடற்கரையில் இருந்து 12 கடல் மைல்கள் வரை பரந்துள்ள அந்நாட்டின் பிராந்திய கடல் எல்லைக்குள் தங்கியிருக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவிற்கு அனுமதி இல்லை என்றும் ‘TankerTrackers’ இணையதளம் குறிப்பிட்டுள்ளது.