2026 August 27, Thursday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° 🌧️ மட்டக்களப்பு 32°
LIVE
நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் மாயம் – மீட்புப் பணிகள் தீவிரம்!நேபாளத்திற்கு உதவ இலங்கை தயார் – ஜனாதிபதிவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குட்டெரெஸ் இரங்கல்!திபெத்திலும் பலர் உயிரிழப்பு – 265 பேர் காணாமல் போனதாக தகவல்!பிற்பகலில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!அதிக மழையால் குக்குலே கங்கை வான் கதவு திறக்கப்பட்டது!யாழ் மாவட்ட செயலக சம்பவம் – சுமந்திரன் கடும் கண்டனம்!காணமல் ஆக்கப்பட்ட பிரச்சனை வடக்குக்கு மட்டும் அல்ல.. செம்மணியின் உண்மையை கண்டறிவோம்.. யாழில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார! 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குட்டெரெஸ் இரங்கல்!

உலகம்August 27, 2026 · 3 hours முன்3
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குட்டெரெஸ் இரங்கல்!

நேபாளம் மற்றும் சீனாவில் பல உயிர்களைப் காவு கொண்டதுடன், பலரைக் காணாமல் ஆக்கி, பரவலான பேரழிவையும் ஏற்படுத்தியுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு தொடர்பில் தாம் மிகுந்த வேதனையடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். 

அதேநேரம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தமது இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையத் தாம் பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

பாதிக்கப்பட்ட அனைவருடனும் நான் துணை நிற்கிறேன் என்று கூறியுள்ள அவர், நேபாள அரசாங்கத்தின் தலைமையிலான மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிக்க ஐ.நா. குழுக்களும் அதன் பங்காளர்களும் தேவையான நிவாரண பொருட்களையும் பணியாளர்களையும் திரட்டி வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.