2026 August 26, Wednesday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° ⛈️ மட்டக்களப்பு 34°
LIVE
யாழ் மாவட்ட செயலக சம்பவம் – சுமந்திரன் கடும் கண்டனம்!காணமல் ஆக்கப்பட்ட பிரச்சனை வடக்குக்கு மட்டும் அல்ல.. செம்மணியின் உண்மையை கண்டறிவோம்.. யாழில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார! அதிவேக நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!ரந்தோலி பெரஹெராவை முன்னிட்டு கண்டியில் போக்குவரத்து மாற்றம்!அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய சம்பவம் – விசாரணைகள் ஆரம்பம்!நபிகள் நாயகத்தின் உயரிய போதனைகளை நினைவுகூரும் மீலாதுன் நபி!மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!சுரேஷ் சலேவுக்கு மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவல்!

காணமல் ஆக்கப்பட்ட பிரச்சனை வடக்குக்கு மட்டும் அல்ல.. செம்மணியின் உண்மையை கண்டறிவோம்.. யாழில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார! 

உள்ளூர்August 26, 2026 · 35 minutes முன்1
காணமல் ஆக்கப்பட்ட பிரச்சனை வடக்குக்கு மட்டும் அல்ல.. செம்மணியின் உண்மையை கண்டறிவோம்.. யாழில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார! 

யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற காணாமல் போனோர் சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமன் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

நாட்டு மக்கள் நமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆணை வழங்கியுள்ள நிலையில் மக்கள் ஆணையை மீறும் வகையில் எமது அரசாங்கம் செயற்பட மாட்டாது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயம் நீண்ட கலமாக புரையோடி உள்ள நிலையில் அவர்கள் தொடர்பில் உண்மையை கண்ணறிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

நாங்கள் அதிகாரத்துக்கு வந்த பின் வார்த்தைகளால் மட்டும் சொல்லவில்லை நடைமுறையில் பல விடையங்களை செய்துள்ளோம்.

செம்மணி மனிதப் புதை குழி அகழ்வு க்காக சுமார் 57 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான வேலை திட்டங்கள் இடம் பெற்றுள்ளது. 

 அதேபோல் கடந்த காலங்களில் காணாமல் போனோர் அலுவலகத்தின் செயல்பாடுகள் மந்தகதியில் செய்யப்பட்டதற்கு உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை காரணமாக அமைந்த நிலையில் அதற்கான உத்தியோகத்தர்களை அதிகரித்து வழங்கியுள்ளோம். 

ஓ எம் பி யில் வழங்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை இயன்றவரை அடுத்த வருடம் முழுமையாக விசாரணை செய்து மேலதிக நடவடிக்கைகள் எடுப்பதற்கு முயற்சி செய்து வருகிறோம். 

ஆகவே செம்மணி தொடர்பில் தேவையற்ற வதந்திகளை நம்ப தேவை இல்லை எமது அரசாங்கம் செம்ணி மனித புதைக்குழி தொடர்பில் நிதியை காரணம் காட்டி செம்மணி உண்மையை கண்டறியும் செயற்பாடுகள் நிறுத்தப்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.