2026 October 9, Friday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கொழும்பு, கம்பஹாவின் பல பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தம்!

உள்ளூர்August 25, 2026 · 2 months முன்11
கொழும்பு, கம்பஹாவின் பல பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தம்!

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகிக்கும் அம்பதலை மற்றும் களனி தெற்கு கரை நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீர் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

களனி கங்கையிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் Intake பகுதிக்கு அருகில் நீரின் தரத்தைப் பாதித்த அவசர நிலைமை காரணமாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் (DMC) அறிவித்தலுக்கு அமைவாக இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நீர் விநியோகத்தைச் சாதாரண நிலைக்குக் கொண்டுவருவது தொடர்பில் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும், தற்போதைய நிலைமையினால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு நுகர்வோரிடம் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.