2026 August 24, Monday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
பொலிஸ் அதிகாரிகள் மீதான தாக்குதல் வழக்கு – சமிந்தவுக்கு பிணை!சுரேஷ் சலேவின் தடுப்புக் காவலை நீடிக்க வேண்டாம் – தாயார் கோரிக்கை!“நாட்டை வீழ்ச்சிக்குத் தள்ளியவர்கள் இன்று புதிய வேடத்தில் அரசியல் நடத்துகின்றனர்” – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்அசிதவின் நெற்றியில் உரசிய ஜெய்ஸ்வாலின் தலைக்கவசம்!வட, தென் அமெரிக்காவில் தெளிவாகத் தெரியும் சந்திர கிரகணம்!குடிநீர் நெருக்கடி குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவிப்பு!பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை!பல பகுதிகளுக்கு பலத்த காற்று எச்சரிக்கை!

பொலிஸ் அதிகாரிகள் மீதான தாக்குதல் வழக்கு – சமிந்தவுக்கு பிணை!

உள்ளூர்August 24, 2026 · 53 seconds முன்0
பொலிஸ் அதிகாரிகள் மீதான தாக்குதல் வழக்கு – சமிந்தவுக்கு பிணை!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

தண்டனைக்கு எதிராகத் தனது சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீடு செய்து, பதுளை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை இன்று (24) பரிசீலித்த பின்னரே அவர் இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

இதன்போது, சமிந்த விஜேசிறியை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

அத்துடன், நீதிமன்றத்தின் அனுமதியின்றி பாராளுமன்ற உறுப்பினர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.